Saturday, 30 December 2017

Salary (சம்பளம்) குறும்படம்

நாள் முழுவதும் கடுமையாக உடல் உழைப்பை தந்து வியர்வை சிந்தும் ஒரு கூலி தொழிலாளியின் வாழ்கையையும், ஏசி அறைக்குள் மூளைக்கு மட்டும் வேலை கொடுக்கும் கணினி துறையில் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையையும் காட்டியிருக்கும் இயக்குனர், இருவரும் சம்பளம் வாங்கிய பின் குறைபட்டு கொள்வதையும் அழகாக காட்டியுள்ளார். இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷமாக வாழ சொல்கிறது இந்த குறும்படம்.

Saturday, 23 December 2017

ஜன்னலுக்கு வெளியே - குறும்படம்

விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகளும், பொருட்களும், உணவு வகைகளும் இருந்தால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும்  என்று நினைக்கும் சிறுவனை அவனது தாத்தா சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார், அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களும் அவர்கள் நிலையையும் பார்க்கும் சிறுவன் உண்மை உணர்ந்து திருந்துகிறான், சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட உண்மை உணர்ந்து திருந்த உதவும் இந்த குறும்படம் ஒரு பாடம்.

Sunday, 17 December 2017

7 Minutes 7 நிமிடங்கள் - குறும்படம் (தெலுங்கு)

துபானம் குடித்து விட்டு வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகளால் சாலைகளில் தறி கெட்டு ஓடும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் பற்றி சொல்லும் படம். 


ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் பேசும் முகமறியாத நபர், ஆட்டோ ஓட்டுனரின் நான்கு வயது  மகள் விபத்தில் அடிபட்டு அவர் வீட்டுக்கு முன்பு கிடப்பதாகவும், விபத்தில் சிக்கிய அவர் மகளை ஏழு நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் சேர்க்கா விட்டால் உயிர் போய் விடும் என்று சொல்கிறார், பதறி போய் வீட்டுக்கு சென்று மனைவியிடம் விசாரிக்கும்போது மகள் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. மீண்டும் வரும் தொலைபேசி அழைப்பில் அந்த நபர் ஆட்டோ ஓட்டுனரை ஏழு நிமிடங்களுக்குள் அருகில் இருக்கும் சுடுகாட்டுக்கு வர சொல்கிறார், வராவிட்டால் மகளை நிரந்தரமாக பார்க்க முடியாமல் போய் விடும் என்று மிரட்டுகிறார். 

சுடுகாட்டுக்கு சென்று பார்க்கும் போது அங்கு ஒரு சடலம் எரிந்து கொண்டிருக்கிறது, அது தன் மகளோ என்று நினைத்து அழும்போது மீண்டும் வரும் தொலைபேசி அழைப்பில் பேசும் மர்ம நபர் மகள் உயிரோடு திரும்ப வேண்டுமென்றால் ஆட்டோ ஓட்டுனரை அருகில் இருக்கும் மேம்பாலத்திற்கு ஏழு நிமிடங்களுக்குள் சென்று அங்கிருந்து கீழே செல்லும் எதாவது ஒரு வாகனத்தின் முன் குதித்து அடிபட்டு சாக சொல்கிறார், மகளை காப்பாற்ற வேறு வழி இல்லாததால் ஆட்டோ ஓட்டுனர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயலும் போது வருகிறது அந்த ட்விஸ்ட்... ஆட்டோ ஓட்டுனரின் மகள் அவரை அழைத்தபடியே  ஒரு கடிதத்தோடு ஓடி வருகிறாள், ஆட்டோ ஓட்டுனரின் மகளை கடத்தி வைத்து கொண்டு இவ்வளவு நேரமாக  தவிக்க விட்டது யார், ஏன் என்ற கேள்விகளுக்கு குறும்படத்தின் கிளைமாக்ஸில் விடை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.  

Saturday, 16 December 2017

பலூன் - டிரைலர்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் பலூன் திரைப்படத்தின் டிரைலர் 


பாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தின் டிரைலர். 


ஏமாலி - டிரைலர்

வீ இசட் துரை இயக்கத்தில் சமுத்திரகனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில்  விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஏமாலி  திரைப்படத்தின் டிரைலர்

Tuesday, 12 December 2017

நட்சத்திர திருமணம் - இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா


ல வருடங்களாக வட இந்திய மீடியாக்களுக்கு சூடான செய்தியாக இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா காதல் இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது, இந்த வருடத்தின் மிக பெரிய நட்சத்திர திருமணம் இது என்று வட இந்திய மீடியாக்கள் கொண்டாடி வருகின்றன.

புது டில்லியில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் 


கடந்த திங்கள்கிழமை டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலி நாட்டில் உள்ள டஸ்காணி என்ற பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த நட்சத்திர  திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த நட்சத்திர திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பபட்டிருந்தது. அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டுமே திருமணம் நடைபெற்ற ரிசார்ட் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி தொகுப்பு


இன்ஸ்டாகிராம்  சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட திருமண புகைப்படங்கள்


Saturday, 9 December 2017

எனக்கு பிடித்த குறும்படம்

னக்கு மிகவும் பிடித்த குறும்படம் என்று சொல்வதை விட என் மனதை மிகவும் பாதித்த குறும்படம் இது, இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள், உயர்தட்டு மக்கள் வசிக்கும் வீடுகளில் வீட்டுவேலைக்கு செல்லும் சிறுமிகளின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் குறும்படம். வயிற்றில் பசியோடு வீட்டு வேலையும் பார்த்து விட்டு நல்ல உணவுக்காக இந்த சிறுமி ஏங்கும் பரிதாபம், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் அன்பையும் உணவையும் கூட வீட்டில் வேலைக்கு வரும் சிறுமிக்கு தராத கொடூர மேல்தட்டு சுபாவம் என்று இந்த குறும்படத்தில் வரும் காட்சிகள் கல் மனதையும் கரைய வைத்து விடும். 


உலகில் வறுமை காரணமாக உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு கூட கிடைக்காமல் பசியினால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது, இந்த குறும்படத்தை பார்ப்பவர்கள் வேதனைபடுவதோடு நின்று விடாமல், இவர்களை போன்ற சிறுமிகள் உங்கள் தெருவில் உங்களுக்கு அருகாமையில் வறுமையின் பிடியில் வேதனைப்பட்டு கொண்டிருந்தால் அவர்களது உணவு மற்றும் கல்வி தேவைகளுக்காக உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். 

Saturday, 2 December 2017

இதயம் தொட்ட குறும்படம்

மிழில் வாழ்க்கை தரும் பரிசு என்று பொருள்படகூடிய தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே தலைமுறை இடைவெளி காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளையும், தாய் மகளை சில விஷயங்களில் கண்டிப்புடன் நடத்த ஆரம்பித்தவுடன்  தாயை வெறுக்க தொடங்கும் மகள், பின்னர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களால் தாயின் அன்பு எப்போதும் மாறாதது என்று உணர்ந்து மகள் மீண்டும் தாயிடம் அன்பு செலுத்த துவங்குவதையும் அழகாக சொல்லியிருக்கும் குறும்படம். 


தானா சேர்ந்த கூட்டம் - டீசர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் டீசர் 

சத்யா - டீசர்

பிரதீப் கிருஷ்ணமுர்த்தி இயக்கத்தில் சிபி, ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சத்யா திரைப்படத்தின் டீசர் 

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்

பி. ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தின் டீசர்