Sunday 28 January 2018

எனது - குறும்படம்

திரைத்துறையில் சாதிக்க விரும்புவோர் அவசியம் கற்று கொள்ள 
வேண்டிய பாடம் இந்த குறும்படத்தில் உண்டு.  


Saturday 20 January 2018

டீ ஸ்பூன் - குறும்படம்

வீட்டையும் கவனித்து கொண்டு வீட்டிலிருந்தபடியே அழகு சாதன பொருட்கள் விற்கும் ஒரு குடும்ப தலைவி, அவளது கணவருக்கு இன்சூரன்ஸ் துறையில் ஓயாமல் அலைந்து கொண்டிருக்கும் வேலை. பக்கத்து வீட்டு பெண்ணோடு தொலைக்காட்சி சீரியலில் வரும் கதைகளை விமர்சித்து அரட்டை அடிப்பதில்,  சீரியலில் வரும் கணவனை போல் தன கணவனும் இருப்பானோ என்று சந்தேகப்பட்டு கணவனிடம் உங்க அலுவலகத்தில் செகரெட்டரி யாரும் இல்லையா? என்று கேட்கும் சராசரி குடும்ப பெண். வாதம் வந்து படுக்கையில் விழுந்து விடும் பேசும் சக்தியை இழந்த வயதான முதியவரான தன் கணவனின் தந்தையை பாசத்தோடு கவனித்து கொண்டாலும், எதாவது முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த முதியவர் மருமகளை அழைப்பதற்கு டீ ஸ்பூனை கொண்டு 'டொக் டொக்' சத்தம் எழுப்பும் போது பொங்கி வரும் கோபத்தை அடக்கி கொண்டு பொறுமையாக செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ ஸ்வரா இயல்பாக நடித்திருக்கிறார். வீட்டிலேயே இருந்து முதியவரை கவனித்து கொள்ள வேண்டியிருப்பதால் வெளியில் கணவனோடு சேர்ந்து எங்கும் செல்ல முடியாத கோபம் ஒரு பக்கம், இன்னொரு புறம் கணவன் வீட்டில் இருக்கும் போது அமைதியாக இருக்கும் முதியவர், கணவன் வெளியில் சென்ற பின் தன்னை வேலை வாங்குவதாக நினைத்து வரும் வெறுப்பு உணர்வு, ஒரு கட்டத்தில் பொறுமை மொத்தமாக கரைந்து போய் ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் அவள் ஒரு விநாடி மதியிழந்து செய்யும் செயல்.... யாருக்கும் தெரியாது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்து இருக்கும் போது மீண்டும்கேட்கும் டீ ஸ்பூனின் 'டொக் டொக்' சத்தம்... எவ்வளவு காலமானாலும் எப்போது அந்த டீ ஸ்பூனின் 'டொக் டொக்' சத்தம் கேட்டாலும் மனதில் அச்சத்துடன் குற்ற உணர்வு தோன்றுமே.... 

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 13 January 2018

Cup of Tea - ஒரு கோப்பை டீ - குறும்படம்

ல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் குறும்படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு கிராம மக்கள் கல்வி கற்க வழியில்லாத அந்த கிராமபுறத்தில் கல்வி கற்க தேர்ந்தெடுத்த வழி கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தாலும் இது போன்ற பள்ளிகள் இல்லாத, கல்வி கற்க வழியில்லாத கிராம மக்கள் வேறு என்ன செய்ய முடியும்? அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒரு கோப்பை தேநீரை புன்சிரிப்புடன் பெற்று கொண்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்க துவங்கும் பெண்ணின் அன்பையும், சமூக அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா? நம் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்று கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியர் இருந்தால் நாடே 100% கல்வியறிவு பெற்ற நாடாக மாறி விடும். 

Sunday 7 January 2018

முற்பகல் செய்யின் - குறும்படம்

வினை விதைத்தவர்கள் வினை அறுத்து தான் தீர வேண்டும், குடி, புகை மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தங்களோடு சேர்த்து தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் வேதனைகளை விதைத்து விடுகிறார்கள், அவர்கள் விதைத்த வினை அவர்களுக்கே விரோதமாக மாறி உயிரையும் குடித்து விடுகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்கள் உள்ளே இழுக்கும் புகை அவர்களுக்கு  தீங்கு விளைவிக்கும் ஆனால் வெளியிடும் புகையோ சுற்றியிருக்கும் எல்லோருக்கும் தீங்கு விதைத்து விடுகிறது. புகைப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடம் இந்த முற்பகல் செய்யின் - குறும்படம்  

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்