திருச்சி மாநகராட்சி தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள முதலிடம் நோக்கி குறும்படம் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்ள மக்கள் தங்கள் பங்குக்கு என்ன செய்யலாம் என்று சொல்கிறது, வீடுகளில் சேரும் குப்பையை (மக்கும் குப்பை, மக்காத குப்பை) பிரிக்காமல் அப்படியே போடுவதால் நகராட்சி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, மக்காத (பிளாஸ்டிக் குப்பைகள்) மண்ணில் சேர்வதால் சூற்றுசூழல் மாசுபடுவது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கபட்டுள்ள இந்த குறும்படத்தை பார்த்த பிறகாவது மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை அலட்சியமாக தெருவில் வீச மாட்டார்கள் என்று நம்பலாம். திருச்சி நகர மக்கள் மட்டுமல்ல, குடியிருக்கும் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா நகர மக்களும் இந்த குறும்படத்தை ஒரு முறை பார்த்தால் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படும்....
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------