Sunday 18 February 2018

முதலிடம் நோக்கி - சூற்றுசூழல் மாசு விழிப்புணர்வு குறும்படம்



திருச்சி மாநகராட்சி தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள முதலிடம் நோக்கி குறும்படம் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்ள  மக்கள் தங்கள் பங்குக்கு என்ன செய்யலாம் என்று சொல்கிறது, வீடுகளில் சேரும் குப்பையை (மக்கும் குப்பை, மக்காத குப்பை) பிரிக்காமல் அப்படியே போடுவதால் நகராட்சி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, மக்காத (பிளாஸ்டிக் குப்பைகள்) மண்ணில் சேர்வதால் சூற்றுசூழல் மாசுபடுவது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கபட்டுள்ள இந்த குறும்படத்தை பார்த்த பிறகாவது மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க  குப்பைகளை அலட்சியமாக தெருவில் வீச மாட்டார்கள் என்று நம்பலாம். திருச்சி நகர மக்கள் மட்டுமல்ல, குடியிருக்கும் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா நகர மக்களும் இந்த  குறும்படத்தை ஒரு முறை பார்த்தால் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படும்.... 

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 10 February 2018

உணர்ச்சி - குறும்படம்

வாழ்க்கையில் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளால் சிலர் வேறு வழியின்றி பாதை மாறி போய் விடுவது உண்டு, ஆனால் நல்மனம் கொண்ட உள்ளங்கள் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவும் போது தவறு செய்கிறவர்கள் மீண்டும் நல்வழியில் நடக்க துவங்குகின்றனர், இந்த குறும்படத்தில் வரும் தாயின் கதாபாத்திரமும், குறும்படத்தின் இறுதியில் ஒரு தாயின் வேதனை உணர்ச்சியை புரிந்து கொண்டு திருந்தும் இளைஞனின் கதாபாத்திரமும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். 

ஒவ்வொரு மனிதினும், சக மனிதர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ தொடங்கினால்  இந்த பூமியே சண்டை, சச்சரவில்லாத அமைதி பூங்காவாக மாறும் என்று சொல்கிறது உணர்ச்சி - குறும்படம்.

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 3 February 2018

I AM WATER - குறும்படம்


சாதிகள் இல்லையடி பாப்பா என்று முண்டாசு கவிஞன் பாரதியார் என்றோ பாடல் இயற்றி சாதி வேறுபாடு பார்க்க கூடாது என்று வலியுறுத்தி இருந்தாலும் இன்றும் நம் நாட்டில் சாதி பார்த்து உயர்வு, தாழ்வு பாராட்டும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர், இது போன்ற சாதி வெறி பிடித்தவர்களால் நாட்டில் சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் பல நடந்துள்ளன, அதனால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், ஆனாலும் சாதி பேதம் பார்ப்பவர்கள் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை, வானிலிருந்து பொழியும் மழை நீர் பூமியில் வாழும் மனிதர்கள் மீது சாதி பார்த்து பொழிவதில்லை... குடிக்கும் தண்ணீரை கொண்டு மிக அழகாக சாதி வேறுபாடு பார்ப்பவர்களுக்கு அருமையாக செய்தி சொல்கிறது I AM WATER - குறும்படம்   

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்