Saturday 9 December 2017

எனக்கு பிடித்த குறும்படம்

னக்கு மிகவும் பிடித்த குறும்படம் என்று சொல்வதை விட என் மனதை மிகவும் பாதித்த குறும்படம் இது, இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள், உயர்தட்டு மக்கள் வசிக்கும் வீடுகளில் வீட்டுவேலைக்கு செல்லும் சிறுமிகளின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் குறும்படம். வயிற்றில் பசியோடு வீட்டு வேலையும் பார்த்து விட்டு நல்ல உணவுக்காக இந்த சிறுமி ஏங்கும் பரிதாபம், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் அன்பையும் உணவையும் கூட வீட்டில் வேலைக்கு வரும் சிறுமிக்கு தராத கொடூர மேல்தட்டு சுபாவம் என்று இந்த குறும்படத்தில் வரும் காட்சிகள் கல் மனதையும் கரைய வைத்து விடும். 


உலகில் வறுமை காரணமாக உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு கூட கிடைக்காமல் பசியினால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது, இந்த குறும்படத்தை பார்ப்பவர்கள் வேதனைபடுவதோடு நின்று விடாமல், இவர்களை போன்ற சிறுமிகள் உங்கள் தெருவில் உங்களுக்கு அருகாமையில் வறுமையின் பிடியில் வேதனைப்பட்டு கொண்டிருந்தால் அவர்களது உணவு மற்றும் கல்வி தேவைகளுக்காக உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.