Saturday 11 November 2017

எனக்கு பிடித்த குறும்படம் - கலியுகம்

உலகில்     100% நல்ல குணங்கள்   மட்டுமே   கொண்ட    நல்ல   மனிதர்களும் 
இருப்பதில்லை,   அதே போல் 100%    தீய குணங்கள்    மட்டுமே    கொண்ட 
பொல்லாத மனிதர்களும் இருப்பதில்லை.  மனித மனம் விசித்திரமானது, பல 
  நேரங்களில்     சந்தர்ப்பமும்    சூழ்நிலையுமே    ஒரு   மனிதனை    நல்ல 
மனிதனாகவும், தீய மனிதனாகவும் சமூகத்தில் வெளிப்படுத்துகிறது. எல்லா 
மனிதர்களுக்கும் சுயநலம் என்ற பொது குணம் உண்டு. அந்த சுயநலம் இந்த 
கலிகாலத்தில் மனிதர்களை   எப்படி    ஆட்டுவிக்கிறது   என்பதை சொல்லும் 
குறும்படம் - கலியுகம்