Saturday 13 January 2018

Cup of Tea - ஒரு கோப்பை டீ - குறும்படம்

ல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் குறும்படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு கிராம மக்கள் கல்வி கற்க வழியில்லாத அந்த கிராமபுறத்தில் கல்வி கற்க தேர்ந்தெடுத்த வழி கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தாலும் இது போன்ற பள்ளிகள் இல்லாத, கல்வி கற்க வழியில்லாத கிராம மக்கள் வேறு என்ன செய்ய முடியும்? அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒரு கோப்பை தேநீரை புன்சிரிப்புடன் பெற்று கொண்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்க துவங்கும் பெண்ணின் அன்பையும், சமூக அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா? நம் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்று கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியர் இருந்தால் நாடே 100% கல்வியறிவு பெற்ற நாடாக மாறி விடும்.